உள்நாடு

வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால் வேள்விக்குறியாகும் விவசாயம்

(UTV | கொழும்பு) – குருநாகல் மாவத்தகம பகுதியில் பயிர்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகள் தற்போது மாத்தறை மாவட்டத்திற்கும் வட மாகாணத்தின் கிளிநொச்சியிலும் பரவியுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்டம் பூருகம மற்றும் வலகந்த ஆகிய பிரதேசங்களில் உள்ள பயிர் சேனைகளை இந்த வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி வருகின்ற இந்நிலையில் வெட்டுக்கிளிகளை அழித்து பயிர்களைக் காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாவும் விவசாய பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் வெட்டுக்கிளி பரவியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top