விளையாட்டு

நானும் கறுப்பினம் என வெறுக்கப்பட்டவன் : கெய்ல்

(UTV | மேற்கிந்திய தீவு) – இனவெறி கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உண்டு என மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் உயிர் இழந்தார். போலிசாரின் இந்நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவிக்கையில்:-

“மற்றவர்களை போல கறுப்பு இன மக்களின் வாழ்க்கையும் முக்கியமானதுதான். அவர்களுக்கு என்று தனி வாழ்க்கை முறை கிடையாது. கறுப்பின மக்களை முட்டாள்கள் போல நடத்துவது நிறுத்தப்பட வேண்டும். நான் உலகம் முழுக்க சுற்றியுள்ளேன். நான் கறுப்பினத்தை சேர்ந்தவன் என்பதால், என் மீதும் இன வெறுப்பை மறைமுகமாகவும, நேரடியாகவும் வெளிப்படுத்தினார்கள்.

இனவெறி கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உண்டு. அணி வீரர்களுக்குள் கறுப்பு இனத்தவர் என்பதால், கடைசி வாய்ப்புதான் கிடைக்கும். கறுப்பு சக்திமிக்கது. கறுப்பு எனது பெருமை”

என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top