உள்நாடு

நாளை முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

(UTV|கொழும்பு)- நாளை(04) முதல் கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை(04) முதல் 05ஆம் , 06ஆம் மற்றும் 07ஆம் ஆகிய தினங்களில் இவ்வாறு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைவாக நகரத்தில் அனைத்து வடிகான் கட்டமைப்பு, இயற்கை கழிவுப்பகுதி மற்றும் சாக்கடைப் புழை (Manhole) ஆகியன பரிசோதனை செய்யப்பட்டு சுத்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட சுற்றாடல் பகுதிகள் பரிசோதனை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்கள் அடையாளங் காணப்பட்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்ட்டுள்ளது.

கொழும்பு நகரம் டெங்கு நுளம்பு அற்ற வலயமாக முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top