ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு! : முக்கிய வீரர்கள் அணியில் இணைப்பு

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணி தலைவராக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், உப தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில், இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் சிலர் இணைக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக தமது திறமைகளை வெளிப்படுத்திவரும் வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அனுபவம் வாய்ந்த முக்கிய வீரர்களான திசர பெரேரா, லசித் மலிங்க, சாமர கபுகெதர மற்றும் நுவான் குலசேகர அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் முழுவிபரம் :

  1. எஞ்சலோ மெத்தியுஸ் (அணித் தலைவர்)
  2. உபுல் தரங்க (உப தலைவர்)
  3. நிரோஷன் டிக்வெல்ல
  4. குசல் ஜனித் பெரேரா
  5. குசால் மெண்டிஸ்
  6. சாமர கபுகெதர
  7. அசேல குணரத்ன
  8. தினேஷ் சந்திமால்
  9. லசித் மலிங்க
  10. சுராங்க லக்மால்
  11. நுவான் பிரதீப்
  12. நுவான் குலசேகர
  13. திசர பெரேரா
  14. லக்ஷான் சந்தகன்
  15. சீகுகே பிரசன்ன

இதேவேளை மேலதிக வீரர்களாக டில்ருவான் பெரேரா மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோரை  இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதுடன், செம்பியன் கிண்ணத்துக்கு அவசரமாக வீரர்கள் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அங்கு அனுப்பிவைப்பதற்காக மேலதிக ஐந்து வீரர்கள் கொழும்பில் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பார்கள் எனவும் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

குறித்த ஐவரின் பெயர்கள் பின்வருமாரு :

  1. விகும் சஞ்சய
  2. லஹிரு குமார
  3. சச்சித்ர பத்திரன
  4. மிலிந்த சிறிவர்தன
  5. அகில தனஞ்சய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *