கேளிக்கை

விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய நடிகை

(UTV | இந்தியா) –  ‘துக்ளக் தர்பார்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான அதிதிராவ், தற்போது அப்படத்திலிருந்து திடீரென விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதில் கதாநாயகியாக அதிதிராவை ஒப்பந்தம் செய்திருந்தனர். படத்தின் தொடக்க விழா பூஜையிலும் அவர் கலந்துக் கொண்டார். தற்போது ஊரடங்கு தளர்வால் துக்ளக் தர்பார் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தில் இருந்து அதிதிராவ் திடீரென்று விலகி விட்டார். கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட கால்ஷீட் குளறுபடிகளால் தற்போது இன்னொரு படத்தில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டு உள்ளது என்றும், இதனாலேயே விஜய் சேதுபதியுடன் நடிக்க திகதி ஒதுக்க முடியாமல் படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து அதிதிராவுக்கு பதிலாக விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ராஷி கண்ணாவை தேர்வு செய்துள்ளனர். நடிகை ராஷி கண்ணா ஏற்கனவே சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top