கொவிட் 19 பரம்பலின் வேகம் முன்னரை விட அதிகம்

கொவிட் 19 பரம்பலின் வேகம் முன்னரை விட அதிகம்

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் சமூக தொற்றாக ஏற்படும் பட்சத்தில் நோயை கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரியான விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொரோனா வைரஸ் கொத்தணி ஏறத்தாழ சகல மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னரை விட தொற்றுப் பரம்பல் வேகமாக இடம்பெறுவதை காணக்கூடியதாக இருக்கிறது. எனவே தொற்று பரம்பலை தடுப்பதற்கு பொது மக்களின் கூடுதலான பங்களிப்பு அவசியம் எனவும் மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர சுட்டிக்காட்டியுன்னார்.

இதேவேளை , நேற்று 633 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டி மற்றும் பேலியகொட கொவிட் கொத்தணி சார்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 6.946 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 10424 அக அதிகரித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )