(UTV | இந்தியா) – இந்தியாவில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து கடலூருக்கு வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக நடிகை குஷ்பு இன்று புறப்பட்டு சென்ற கார் மீது லொரி மோதி விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதில் அதிர்ஷ்டவசமாக நடிகை குஷ்பு உயிர் தப்பியுள்ளார். விபத்து குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්