கிசு கிசு

ரஞ்சனின் இடைவெளிக்கு விஜயமுனி

(UTV | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு அவர் பாராளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிட்டால் வெற்றிடமாகும் ஆசனத்திற்கு மற்றுமொரு அரசியல்வாதியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய கடந்த பொதுத் தேர்தலில் தோல்விகண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் விஜித் விஜயமுனி சொய்ஸாவின் பெயர் முன்மொழியப்பட்டிருப்பதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top