ட்ரம்பின் பிரியாவிடை கோரிக்கையை பென்டகன் நிராகரிப்பு

ட்ரம்பின் பிரியாவிடை கோரிக்கையை பென்டகன் நிராகரிப்பு

(UTV |  அமெரிக்கா) – ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரமாண்ட பிரியாவிடை கோரிக்கையை, பென்டகன் நிராகரித்துள்ளது. எதிர்வரும் புதன்கிழமை அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். நாளைய தினத்துடன் டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு இடம்பெறவேண்டுமென டொனால்ட் ட்ரம்ப், இராணுவ தலைமையகமான பென்டகனில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைய பிரியாவிடை நிகழ்வு தேசிய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

COMMENTS

Wordpress (0)
Disqus ( )