இதுவரை 103 பேர் சிக்கினர் 

இதுவரை 103 பேர் சிக்கினர் 

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய 10,925 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

இதன்படி, அவர்களில் 103 பேருக்கு இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தைப்பொங்களுக்கு முந்தைய தினத்தில், கொழும்பிலிருந்து வெளியிடங்களுக்கு சென்ற நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாகவும் அவர் குறிப்பிட்டார்

குறித்த தினத்தில் 1,658 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே, 21 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல், மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில், 103 பேருக்கு இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்படி, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு, 11 இடங்களில் தொடர்ந்தும் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டிக்காட்டியிருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

COMMENTS

Wordpress (0)
Disqus ( )