கொரோனா ஜனாஸா அடக்கத்தின் எதிரொலி? : இம்ரானின் உரையை இரத்து செய்தது இலங்கை அரசு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அவரது உரையை அரசாங்கம் தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 22ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் பாகிஸ்தான் பிரதமர், இரு நாட்கள் தங்கியிருப்பார் என்பதோடு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம்ரான் கானின் உரையினை திடீரென இரத்து செய்தமை சிறுபான்மை மக்கள் இடையே பெரும் கேள்விக்குறியாக உள்ளது எனலாம். இந்நாட்களில் பரவலாக பேசப்படும் ஒரு பேச்சுபொருளாக கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாசாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் வாத பிரதி வாதங்கள் எழுந்து வருகின்ற நிலையில், கடந்த பாராளுமன்ற அமர்வொன்றில் பிரதமர் அதற்கு தான் அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றியினை தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும், பிரதமரின் உரையின் பின்னர் மறுநாள் தொடக்கம் ஊடகங்களில் ஜனாஸா அடக்கம் தொடர்பில் ஏட்டிக்கு போட்டியாக இனவாதக் கருத்துக்கள் பரவத் தொடங்கின. இந்நிலையில் இம்ரான் கானின் பாராளுமன்றம் உரை இரத்து செய்யப்பட்டுள்ளமை சந்தேகம் நிலவுகின்றது என்பதில் நியாயம் உண்டு என்றே கூறலாம்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *