அலி வீசும் பந்துக்கு, நாம் துடுப்பெடித்தாடிக் கொண்டிருக்கின்றோம் : ஞானசார எச்சரிக்கை [VIDEO]

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர் என்பதால், அந்தத் தாக்குதலைப் போன்ற தாக்குதல்கள் நாளையும் நடக்கலாம் எனத் தெரிவித்த, பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அலி சப்ரி வீசும் பந்துக்கு, நாம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

“… தேவையற்ற ஆட்டம் போடும் அலி சப்ரி குறித்து, உடனடியாகத் தீர்மானம் எடுத்து, காதைப்பிடித்து ஜனாதிபதி வெளியே தள்ள வேண்டும். ராஜபக்ஸர்களின் வழக்குகளை விசாரித்ததற்காக, இவருக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டுமா, அதை விடத் தகுதியானவர்கள் பலர் உள்ளனர்..

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, எங்களைக் குற்றவாளியாக்கும் என மக்கள் நினைத்துப் பார்க்கவில்லை. எம்மைப் குற்றவாளியாக்க, நாம் என்ன தவறிழைத்தோம்.. விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, இவ்வாறு மோசமாக இருக்குமெனத் தான் நினைக்கவில்லை. அதனால், எதையும் எளிதாக விட்டுவிடமாட்டோம்…

இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், இப்போது நிறைய வீரர்கள் உருவாகியுள்ளனர். இந்த அரசியல் தலைவர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், நடந்த விடயங்கள் குறித்து, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வரவிருக்கும் பேரழிவிலிருந்து முழுநாட்டையும் பாதுகாக்க பொதுபலசேனா பல திட்டங்களைச் செயற்படுத்தியிருந்தது, ஆனால், இப்போது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது. எதற்கும் முகம் கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம். எந்ததெந்த ஒழுங்குப்பத்திரங்களை மனதில் வைத்துக்கொண்டு, தமது எதிர்கால அரசியல் தேவைகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் திருடர்கள், ஆணைக்குழுவுக்குள் நுழைந்துவிட்டனரா என்று எமக்கு தெரியவில்லை. பொது பலசேனாவைத் தடைசெய்யவோ, எம்மீது குற்றம் சுமத்தவோ வருவார்களானால், அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம்..

தேசத்தின் தலைவிதியைக் காப்பாற்ற, சிறைக்குச் சென்றவர்களுக்குக் கிடைக்கும் பரிசு இதுவென்றால், இந்த அறிவியலற்ற முறை குறித்து ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஜனாதிபதிக்கு மாத்திரமே, இப்போது கையளிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் உள்ளவை, ஓரிரண்டு ஊடகங்களில் எவ்வாறு வெளிவருகின்றன?

இவ்வாறான தாக்குதல் நாளையும் நடக்கலாம். ஏனெனில், இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர். நேரத்துக்கு ஏற்றவாறு அலி சப்ரி வீசும் பந்துக்கு, நாம் துடுப்பெடித்தாடிக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கலந்தரையாடலை, வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், அலி சப்ரி நாட்டின் தலைவர் அல்லவே; அவர் நீதியமைச்சர் மாத்திரமே..” என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *