வணிகம்

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த முச்சக்கர வண்டிகளுக்கு “பயணிகள் பாதுகாப்பு கவசங்களை” வழங்கும் HNB Finance

(UTV | கொழும்பு) – இலங்கையின் முன்னணி நிதி சேவை தொகுப்பாளர்களான HNB Finance PLC தமது நிறுவன ரீதியான சமூக பொறுப்புணர்வு அணுகலின் கீழ் கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கும் வகையில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத் திட்டமொன்றை பிரதேச சுகாதார மருத்துவ அலுவலகம் மற்றும் நுகேகொடை மக்கள் சுகாதார பரிசோதனை அதிகாரி மாதவ கொடகெதரவின் ஒத்துழைப்புடன் HNB Financeஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத்தினதும் மற்றும் மேல்மாகாண பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில கட்டுபிட்டிய ஆகியோரின் பங்களிப்பில் நுகேகொடை, மிரிஹான பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கொவிட் தொற்றுநோய் நிலைமையின் போது பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லுதல் மற்றும் பயணிகள் சேவைகளை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தெளிவுபடுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்த வேலைத் திட்டத்திற்காக நுகேகொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் சேவைகளை மேற்கொண்டு செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகள் 250 பேர் இதில் பங்குகொண்டதுடன் அவர்களது முச்சக்கர வண்டிகளுக்காக தரமான பயணிகள் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்காக தரமான முகக் கவசங்களையும் வழங்குவதற்கு HNB Finance நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் தொற்றுநோய் சமூகத்திற்குள் பரவிச் செல்வதை தடுப்பதற்காக கொவிட் பரவுவதை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கை குழு மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் கட்டுப்படுத்தும் பிரிவினால் பயணிகள் பஸ் வண்டிகள் மற்றும் தனிநபர் முச்சக்கர வண்டிகளில் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் கண்டிப்பாக இருக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு இடையிலுள்ள இடைவெளியை பேணுவதற்கு பயணிகள் பாதுகாப்பு கவசங்களை அணிவிப்பதற்காக பயணிகளுக்கு ஆலோசனைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன் இதன் முக்கியத்துவத்தை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு 25,000 ரூபா தண்டனைக்கு உள்ளாவார்கள்.

சமூக இடைவெளி மற்றும் கொழும்பு நகரும் அதனை அண்டிய பகுதிகளில் இடைக்கிடையே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு முச்சக்கர வண்டி சாரதிகளின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் தரமான பயணிகள் பாதுகாப்பு கவசங்களை பெற்றுக் கொடுப்பதன் மூலம் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொவிட் தொற்றுவதை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குதன் மூலம் தண்டனைக்கு உள்ளாகும் அவதானத்தைக் குறைத்துக் கொள்வதற்காக முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற விடயங்களை முழுமையாக பெற்றுக் கொடுப்பதற்கு இந்த அர்ப்பணிப்பின் மூலம் HNB Finance நிறுவனத்திற்கு முடிந்துள்ளது.

மேலும் இந்த வேலைத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த HNB Finance PLCஇன் விற்பனை பிரதானி உதார குணசிங்க, “முச்சக்கர வண்டி சேவையானது இந்த நாட்டின் பயணிகள் போக்குவரத்து செயற்பாட்டின் முக்கியமான அங்கமாக இருப்பதுடன் கொவிட் வைரஸிற்கு உள்ளாவது குறித்து அறிவுறுத்துகையில் முச்சக்கர வண்டி சாரதிகள் சமூகத்திற்குள் பாரிய அளவில் அவதானத்திற்கு உள்ளாகக் கூடிய பிரிவினராக கருதப்படுகிறார்கள். அதனால் பிரதேச பொலிஸ் நிலையம் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோரை இணைத்துக் கொண்டு கொவிட் பரவுவதைக் கட்டுப்படுத்துவது குறித்து இந்த காலத்திற்கேற்ற வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம்.

இதன்போது அவர்களுக்கு தரமான பயணிகள் கவசங்களைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வைரஸ் தொற்றுவதை குறைப்பது எமது நோக்கமாகவும் உள்ளது. அதுபோலவே இந்த வேலைத்திட்டம் எமது கிளைகளின் ஊடாக இலங்கை முழுவதிலும் மேற்கொள்வதற்கும் அதனூடாக கொவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கும் தேவையான உச்ச அளவு ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொடுக்கவும் சமூக பொறுப்புணவு குறித்து சிந்திக்கும் நிறுவனமாக நாம் எதிர்காலத்திலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.” என தெரிவித்தார்.

இவ்வாறான விழிப்புணர்குகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்காக பயணிகள் பாதுகாப்பு கவசங்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் முச்சக்கர வண்டிய சாரதிகள் தனது வாழ்த்துக்களை HNB Financeக்கு வழங்கியதுடன் இந்த நிகழ்விற்கு மிரிஹான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி – பொலிஸ் பரிசோதகர் எச்.ஏ.எம். துஷார உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் HNB Finance நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top