கல்வான் பள்ளத்தாக்கு மோதல் – முதல் முறையாக சீனா ஒப்புதல்

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் – முதல் முறையாக சீனா ஒப்புதல்

(UTV | சீனா) – கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனா தரப்பில் 5 வீரர்கள் உயிரிழந்திருப்பதை சீன அரசு முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜூன் 15ம் திகதி இரு நாடுகளின் படைகளும் கல்வான் பள்ளத்தாக்கில் கடுமையாக மோதிக் கொண்டன. இதில், இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய இராணுவம் அறிவித்தது.

இந்த மோதலில் சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தது 30 பேர் உயிரிழந்திருக்கலாம் என இந்தியா கூறியது. 45 சீன வீரர்கள் இறந்திருப்பதாக ரஷியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. ஆனால், உயிரிழப்பு ஏற்பட்டதாக சீனா ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் முதல் முறையாக சீன அரசு உயிரிழப்பை ஒப்புக்கொண்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனா தரப்பில் அதிகாரிகள், வீரர்கள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்திருப்பதாக சீன இராணுவம் இன்று கூறியுள்ளது.

சீன இராணுவத்தின் சின்ஜியாங் படைப்பிரிவு கமாண்டர் குய் ஃபபாவோ மற்றும் சென் ஹாங்ஜன், சென் சியாங்ராங், சியாவோ சியுவான் மற்றும் வாங் ஜுயோரன் ஆகியோர் உயிரிழந்ததாகவும், அவர்களுக்கு சீன மத்திய இராணுவ ஆணையம் மரியாதை செலுத்தி கெளரவித்ததாகவும் சீன இராணுவத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான பி.எல்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )