வாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி

வாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி

(UTV | கொழும்பு) – பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்காக வழங்கப்படும் நிதி வசதிகளை, வாகனங்களின் பெறுமதியில் 80 சதவீதம் வரையில் உயர்த்த மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதற்கமைவான உத்தரவு, மத்திய வங்கியின் நாணய சபையினால், வங்கியில்லா நிறுவனங்களுக்கு கடந்த 17 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நிதி வணிகச் சட்டத்தின் 12ஆவது சரத்தின் கீழ் வெளியிடப்பட்ட இந்த உத்தரவின்படி, முதற்தடவை பதிவு செய்யப்பட்டதன் பின்னர், இந்த நாட்டில் ஒரு வருடத்திற்கும் அதிக காலம் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு, அதன் பெறுமதியில் 80 சதவீத நிதி வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )