விளையாட்டு

இலங்கை கிரிகெட் நிறுவனம் இன்று மீண்டும் கோப் முன்னிலையில்

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிகெட் நிறுவனம் இன்று மீண்டும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இலங்கை கிரிகெட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோது கிரிகெட் நிறுவனத்தின் அதிகாரிகள் உரிய தயார்ப்படுத்தலுடன் வருகைதராத காரணத்தால் அக்கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு மீண்டும் ஒரு மாதத்தில் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே கிரிகெட் நிறுவனம் இன்று மீண்டும் அழைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையிலான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) ஏப்ரல் மாதத்தில் நான்கு அரசாங்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய ஏப்ரல் 07 ஆம் திகதி தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்திச் சபையும், ஏப்ரல் 20 ஆம் திகதி இலங்கை உதைபந்து சம்மேளனம் மற்றும் ஏப்ரல் 2 3ஆம் திகதி தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் என்பன அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top