கிசு கிசு

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாரஹேன்பிட்டி ஸ்ரீ அபயாராம விகாரைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

சமய வழிபாட்டுக்களுக்கு பின்னர் பிரதமர் அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவை ஆட்சிபீடமேற்றுவதற்குத் தளமமைத்து இயங்கிய அபேராம விகாரையில் தற்போது அரசாங்கத்தை வெகுவாக விமர்சிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷ நேரடியாகவே தொலைபேசி ஊடாக ஆனந்த தேரருடன் பேசிய விதம் இந்நாட்களில் பெரும் சர்ச்சையினை கிளப்பியுள்ளது.

அங்கு நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வைத்து விஜேதாச ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தனது அதிருப்தியை தெரிவித்துள்ள ஜனாதிபதியின் பேச்சுக்கள் ஆனந்த தேரரை வருத்தத்துக்குள்ளாக்கியுள்ள நிலையில் இது குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் தெளிவுபடுத்தவே பிரதமர் இவ்வாறு அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்திக்கச் சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top