உள்நாடு

துறைமுக நகரம் : மனு விசாரணை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு விசாரணை மீண்டும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனு உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் குறித்த குழு கடந்த 15 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புவனெக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, முர்த்து பெர்ணான்டே மற்றும் ஜனக் த சில்வா ஆகியவர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top