இலங்கை வலைப்பந்தாட்ட அணி தென்கொரியா பயணம்

(UDHAYAM, COLOMBO) – 10 ஆவது தெற்காசிய இளையோர் வலைப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை வலைப்பந்தாட்ட அணி தென்கொரியா பயணமானது.

தென்கொரியாவின் ஜியொன்ஜு விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் இலங்கை அணி ஏ பிரிவில் போட்டியிடவுள்ளது.

ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த 10 நாடுகள் கலந்து கொள்ளவுள்ள இந்த போட்டி 14ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

இலங்கை அணி முதல் சுற்றில் தாய்லாந்து, மாலைதீவு, பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுடன்  போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )