சுவீடன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சுவீடன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV | ஸ்டாக்ஹோம், சுவீடன்) – சுவீடனில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருபவர் ஸ்டீபன் லோப்வென்.

இந்த நிலையில் சுவீடனில் கொரோனா காலத்தில் வீட்டுவசதி துறையில் கடும் நெருக்கடியான சூழல் உருவானது. ரியல் எஸ்டேட் விலைகள் கிடுகிடுவென உயர்ந்தன. இதையடுத்து வீட்டு சந்தையை ஒழுங்குபடுத்த அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் ஸ்டீபன் லோப்வென் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. நேற்று இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது பெருவாரியான உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அந்த தீர்மானம் நிறைவேறியது. இதன் மூலம் சுவீடன் வரலாற்றில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தோல்வியை தழுவிய முதல் தலைவராகியுள்ளார் ஸ்டீபன் லோப்வென்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )