கேளிக்கை

இளவரசி டயானா வாழ்க்கை படத்தின் டிரைலர் வெளியீடு

(UTV |  லாஸ் ஏஞ்சல்ஸ்) – கிறிஸ்டன் ஸ்டீவார்ட் நடித்த ஸ்பென்சரின் முதல் டீசர்-டிரைலர் வெளியாகியுள்ளது.இந்த படம் நவம்பர் 5 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் பலியாகி ஏறத்தாழ 25 ஆண்டு காலம் ஆகி இருந்தாலும் இன்னும் மக்கள் மனம் கவர்ந்தவராகவே திகழ்கிறார்.

அவரது வாழ்க்கைக் கதை ‘ஸ்பென்சர்’ என்ற பெயரில் ஹாலிவுட் படமாக தயாராகி வருகிறது. பாப்லோ லாரைன் இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படத்தில் டயானா வேடத்தில் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவார்ட் நடிக்கிறார். இளவரசர் சார்லஸ் வேடத்தில் ஜாக் பார்திங் வருகிறார்.

இந்தப்படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அடுத்த மாதம் 3-ந் தேதி சிறப்புக்காட்சியாக திரையிடப்படுகிறது. டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் அடுத்த மாதம் 15-ந்தேதி இந்தப் படத்தின் பிரத்யேக காட்சி இடம் பெறுகிறது.

உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிற இந்தப் படத்தின் முதல் ‘போஸ்டர்’ வெளியானது. தற்போது அவர்கள் ஒரு நிமிட நீள டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

டிரைலர் 1990 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் வார இறுதியில் அரச குடும்பத்தின் விடுமுறை இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இளவரசி டயானா தனது மனச்சோர்வு வாழ்க்கையை எவ்வாறு கையாண்டார் என்பதை காட்சிகள் விளக்குகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top