இலங்கையில் கொரோனாவுக்கு 80 பிரபலங்கள் பலி 

(UTV | கொழும்பு) –  இலங்கையில் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பிரபுக்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட பிரபலமாக 80 இற்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் கொவிட் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளார்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

இவர்களில் பாடகர்கள், நடிகர்கள் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 300க்கும் அதிகமான நபர்கள் இதுவரையில் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கொவிட் தொற்றுக்குள்ளாகிய அமைச்சர் உறுப்பினர்களின் எண்ணிக்கை 27ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த முக்கிய பிரமுகர்களில் முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர, முன்னாள் சபாநாயகர் வி.ஜ.மு.லொக்குபண்டார, சைட்டம் பல்கலைக்கழகத்தின் பிரதானி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ, கெபிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர் ராஜமஹேந்திரன், ஜிப்ஸிஸ் இசை குழுவின் தலைவர் சுனில் பெரேரா, இராணுவ பிரிகேடியர் எஸ்.டீ.உதயசேன, விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர், மேல் மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் டக்லஸ் பெர்ணான்டோ, ராகம வைத்தியசாலை வைத்தியர் கயான் தன்தநாராயன, சட்டத்தரணிகள் நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி கௌரி தவராஸா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *