உலகம்

இஸ்ரேலில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

(UTV | இஸ்ரேல்) –  உலகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதை வேகப்படுத்தி , முகக்கவசம் இல்லாமல் மக்கள் வாழ்க்கையை நடத்தலாம் என்று முன்னோடியாக இருந்த இஸ்ரேல் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக அதிகரித்து வருகிறது.

கடந்த 3 மாதங்களாக இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸின் உருமாறிய டெல்டா வகை வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இஸ்ரேலியில் உள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்திய நிலையிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது,

இதனால் தற்போது குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு வேகப்படுத்தியுள்ளது, மீண்டும் இஸ்ரேலில் பல்வேறு போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இஸ்ரேலில் பெரும்பாலும் மக்களுக்கு அமெரிக்காவின் ஃபைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 85 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன் ஜூன் மாதத்திலிருந்து மக்கள் முகக்கவசம் அணியாமல் செல்லலாம், கூட்டங்கள், விழாக்கள், விருந்துகள் நடத்துவதில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என அரசு அறிவித்தது.

இதனால் மக்கள் கட்டற்றற்ற சுதந்திரத்தோடு வீதிகளிலும், சாலைகளிலும், சுற்றுலாத் தளங்களிலும் அலைந்தனர். பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன, கேளிக்கை விடுதிகள் திறக்கப்பட்டன.

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் இருந்தாலும், தீவிரமாகக் கண்காணிக்கப்படவில்லை. விளைவு, இஸ்ரேலில் ஆபத்தான டெல்டா வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.

ஆனால், தற்போது டெல்டா வகை வைரஸ் இஸ்ரேலில் பரவத் தொடங்கி, வேகமெடுத்துள்ளது. இதனால், கடந்த இரு மாதங்களாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அறிவித்த இஸ்ரேல் சுகாதாரத்துறை, மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல அறிவுறுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top