உள்நாடு

ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர் உரை

(UTV | கொழும்பு) – ஜி20 சர்வமத மாநாடு 2021 இன்று (12) போலோக்னா நகரில் ஆரம்பமாகவுள்ள நிலையில், மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் தலைமை உரை ஆற்றுமாறு கிடைத்த அழைப்பொன்றிற்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜக்ஷ இன்று இணைந்து கொள்ளவுள்ளார்.

‘கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களுக்கிடையே புரிதல்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு இடம்பெறவுள்ளது.

இவ்விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த இராஜதந்திர சந்திப்பின்போது இத்தாலி ஜனாதிபதி கௌரவ மரியோ ட்ராகி (Mario Draghi), ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் கௌரவ டேவிட் சசோலி (David Sassoli ) மற்றும் ஸ்லோவேனியா ஜனாதிபதி கௌரவ பொருட் பாஹோர் (Borut Pahor) உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top