உள்நாடு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் இலவச PCR பரிசோதனை

(UTV | கொழும்பு) – தொழிலுக்காக வௌிநாடு சென்று நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு இன்று முதல் இலவசமாக PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ள பணியாளர்களுக்கு மாத்திரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கட்டணம் அறவிடாது இலவசமாக PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தொழிலாளர் நலன்புரி நிதியத்தினூடாக PCR பரிசோதனைக்கான கட்டணத்தை ஒதுக்குமாறு துறைசார் அமைச்சு, பணியகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

நாடு திரும்பும் இலங்கை பணியாளர்களை தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய, மிக விரைவில் தங்களின் வீடுகளுக்கு அனுப்புவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top