மீனவர்களின் கடல்வழி போராட்டம் ஆரம்பமாகியது

மீனவர்களின் கடல்வழி போராட்டம் ஆரம்பமாகியது

(UTV | முல்லைத்தீவு) – இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரியும் வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மீனவர்கள் இன்று(17) கடல்வழி போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகையினையும், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளையும் கண்டித்தும், இழுவைப்படகு தடைச் சட்டத்தை அமுல்படுத்தக்கோரியும் இன்றையநாள் வடபகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்குபடுத்தலில் மேற்கொள்ளப்படும் குறித்த ஆர்ப்பாட்டம், முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகுகள் மூலம் பேரணியாக ஆரம்பித்து யாழ்ப்பாணம் பருத்தித்துறையை நோக்கி செல்கின்றது.

இவ்வாறு பேரணியாகச்செல்கின்ற படகுகள், “மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாருங்கள்”, “இழுவைப்படகு தடைச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துங்கள்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகள் மற்றும், கொடிகளை ஏந்தியவாறு பேரணியை மேற்கொண்டுள்ளன.

முல்லைத்தீவு – கள்ளப்பாடு கடற்கரையில், இன்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல் வழியான கண்டனப் படகு பேரணி, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை துறைமுகத்தை இன்று காலை 9.30 மணியளவில் வந்தடைந்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் பேரணியாக பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தனர்.

இதன் பின்னர், அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் இந்த பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமநதிரன், இரா.சாணக்கியன், சி.சிறீதரன், முன்னாள் வடமாகணாசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,

COMMENTS

Wordpress (0)
Disqus ( )