கேளிக்கை

“மதத்தை என்னில் திணிக்க வேண்டாம்”

(UTV |  இந்தியா) – ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் உர்பி ஜாவித், பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேற்றப்பட்டிருந்தார். எப்போதும் வித்தியாசமாக உடை அணிவதற்கு பெயர் போன உர்பி ஜாவித்தை இணையத்தில் பலரும் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் முஸ்லிம், காதல், திருமணம் குறித்து அவர் பேசுகையில், ‛எனக்கு இந்த துறையில் காட்பாதர் இல்லாததால் உடைக்காக என்னை கிண்டல் செய்கிறார்கள். நான் ஒரு முஸ்லிம் பெண். என்னை திட்டி வரும் கமெண்ட்டுகளில் பெரும்பாலானவை முஸ்லிம்களிடம் இருந்து வருகிறது. நான் இஸ்லாத்தின் பெயரை கெடுக்கிறேனாம். நான் ஒருபோதும் முஸ்லிம் பையனை திருமணம் செய்ய மாட்டேன். எனக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை இல்லை.

எந்த மதத்தையும் நான் பின்பற்றவில்லை. மதத்தை திணிக்கக் கூடாது. அதுவாக பிடிக்க வேண்டும். இல்லை என்றால் நீங்களோ, அல்லாவோ சந்தோஷப்பட முடியாது. நான் தற்போது பகவத் கீதை படித்துக் கொண்டிருக்கிறேன். ஹிந்து மதம் பற்றி நிறைய தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கீதையில் இருந்து நல்ல விஷயத்தை எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்,’ எனப் பேசியிருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top