உள்நாடு

டொலர் நெருக்கடிக்கான காரணம் என்ன? – தீப்தி குமார விளக்கம்

(UTV | கொழும்பு) – உலக வல்லரசுகளின் போராட்டத்திலும், பிராந்திய படைகளின் போராட்டத்திலும் இலங்கைக்கு முக்கிய இடமொன்று இருப்பதாக சமபிம கட்சியின் தலைவர் தீப்தி குமார குணரத்ன தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் கடந்த வாரம் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் விளக்கமளிக்கையில்;

“.. கடந்த காலங்களில் நாட்டின் இராணுவத்துடனான உறவுகளும் பிராந்திய படைகள் மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகள் போன்றவற்றை பார்க்கும் போது உலக வல்லரசுகளின் போராட்டத்திலும் பிராந்திய சக்திகளின் போராட்டத்திலும் கூட இலங்கைக்கு முக்கிய இடமொன்று இருக்கின்றது.

குறிப்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிராந்தியப் போராட்டம் மேலும் மேலும் அமெரிக்க மயமாகி வருகின்றதாலும் எதிர்காலத்தில் மிக முக்கியமான இடத்துக்கு செல்லலாம்.அதன் முதலாவாது விளைவாகத்தான் தற்போது டொலர்பற்றாக்குறை என்ற ஒரு நெருக்கடி உருவாகியுள்ளது..” என சமபிம கட்சியின் தலைவர் தீப்தி குமார குணரத்ன தெரிவித்திருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top