கேளிக்கை

அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திர ஜோடி பிரிந்தனர்

(UTV |  லாஸ் ஏஞ்சல்ஸ்) – அமெரிக்காவில் ஹாலிவுட் பட உலகில் மிகவும் பிரபலமாக விளங்கிய நட்சத்திர காதல் ஜோடி ஜேசன் மோமோவா, லிசா போனட்.

இவர்கள் முதன்முதலாக 2005-ம் ஆண்டு, ஜாஸ் கிளப் ஒன்றில் சந்தித்தனர். அப்போதே இருவரும் காதல் வயப்பட்டனர்.

இதுபற்றி டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் ஜேசன்மோமோவா கூறும்போது, “எனக்கு 8 வயதாக இருந்தபோது நான். அவளை டி.வி.யில் பார்த்தபோதே, அம்மா எனக்கு அவள் வேண்டும் என்று கூறினேன். விரும்பினேன். என் வாழ்நாள் முழுவதும் உன்னைப் (லிசா போனட்) பின்தொடர்ந்து உன்னை நான் அடைவேன்” என்று நெகிழ்ந்தார். இருவரும் உருகி உருகி காதலித்தனர்.

லிசா 2007-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அடுத்த ஆண்டில் ஒரு ஆண்குழந்தையையும் பெற்றார்.அதன்பின்னர் 2017-ம் ஆண்டுதான், 2 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.தற்போது 5 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த காதல் திருமண வாழ்க்கை அவர்களுக்கு கசந்து போனது. இருவரும் தங்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக கூட்டாக சமூக ஊடகம் ஒன்றில் அறிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் அவர்கள், “எங்களுக்கு இடையேயான காதல் தொடர்கிறது. அது அறியப்படவும், வாழவும் விரும்பும் வழிகளில் உருவாகிறது. நாங்கள் ஒருவரை ஒருவர் விடுவித்துக்கொள்கிறோம். இந்தப் புனிதமான வாழ்க்கை மற்றும் எங்கள் குழந்தைகள் மீதான பக்தி அசைக்க முடியாதது” என கூறி உள்ளனர்.இவர்களின் பிரிவு ஹாலிவுட் பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top