உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய தொழிலாளர் விதிகள்

(UTV |  அபுதாபி) – ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும்பிப். 2 முதல் புதிய தொழிலாளர் விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளன. 

ஐக்கிய அரபு அமீகரகத்தில் (UAE) இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் வேலை செய்துவருகின்றனர். 34.25 லட்சம் இந்தியர்கள் யுஏஇ-யில் உள்ளனர். இது அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 38% ஆகும். இதுவரையிலான யுஏஇ-ன் தொழிலாளர் விதிகள், நிறுவனங்களுக்கே சாதகமாக இருந்தாக கூறப்பட்டுவந்த நிலையில், தொழிலாளர்களுக்கு கூடுதல் வசதி வழங்கும் வகையில், புதிய தொழிலாளர் விதியை யுஏஇ உருவாக்கியுள்ளது.

புதிய தொழிலாளர் விதிப்படி பகுதி நேர வேலைகள், தற்காலி வேலைகள் போன்ற வாய்ப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனால், இனி ஒரு தொழிலாளர்ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் வேலை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. வேலை நாட்களும் 4.5 நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. புதிய விதிப்படி, இனி பணி ஒப்பந்தங்கள் நிலையான கால ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். ஊழியரை வேலையிலிருந்து நீக்குவதற்கு உரிய காரணம் வழங்கபட வேண்டும். பேறுகால விடுமுறை போன்றவை ஊழியர்களுக்கு முறையாக வழங்கபட வேண்டும். பணியிடங்களில் பாலின ஏற்றத்தாழ்வை போக்கஆண்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்கும் வழங்கவேண்டும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிகள் குறித்து இந்தியத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். புதியதொழிலாளர் விதிகளால், தொழிலாளர்களுக்கு வேலை சார்ந்தபாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்றும், இந்த விதிகள் முறையாக கடைபிடிக்கப்படும் பட்சத்தில், தொழிலாளர்களின் பணிச் சூழல் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top