உலகம்

பெப். 6 வரை இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு

(UTV |  பிகார்) – பிகார் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு பெப்ரவரி 6 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பிகாரில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொற்று பரவல் சூழல் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பிகாரில் அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் பிப்ரவரி 6 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு பெப்ரவரி 6 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். பிகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 3,475 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 26,673 பேர் மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top