நியூசிலாந்து பிரதமரின் திருமணம் ஒத்திவைப்பு

நியூசிலாந்து பிரதமரின் திருமணம் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – தமது அரசாங்கம் விதித்துள்ள கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக தனது திருமணத்தை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

புதிய கொவிட் கட்டுப்பாடுகளுக்கு அமைய, நியூசிலாந்தில் நடத்தப்படும் விழாக்களில் அதிகபட்சமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட 100 பேருக்கு மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

உலகளாவி ரீதியில் கொவிட் பரவல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரையும் போலவே தானும் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

திருமண நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நியூசிலாந்தின் நகரங்களுக்கு இடையில் பயணித்த 9 பேருக்கும், அவர்கள் பயணித்த விமானத்தின் பணிக்குழாமில் ஒருவருக்கும் ஒமைக்ரொன் தொற்று உறுதியான நிலையில், இவ்வாறான புதிய கட்டுப்பாடுகள் நியூசிலாந்து அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டது.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மற்றும் அவரது காதலரான க்ளார்க் கேஃபோர்ட் ஆகியோரின் திருமண திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் அடுத்த சில வாரங்களில் அவர்களின் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )