உள்நாடு

கந்துருகஸ்ஹார சிறைச்சாலையில் கைதி உயிரிழந்த சம்பவத்தில் மூவர் பணி நீக்கம்

(UTV |  எம்பிலிப்பிட்டிய) – எம்பிலிப்பிட்டிய – கந்துருகஸ்ஹார திறந்தவெளிச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சிறை அதிகாரி உட்பட மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அச்சிறைச்சாலையின் சிறைக்காவலர், சார்ஜன்ட் மற்றும் சிறை அதிகாரி ஆகியோர் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு 10,000 ரூபாவை திருடிய குற்றச்சாட்டில் குறித்த நபருக்கு கடந்த வருடம் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நீதிமன்றத்தினால் 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர், அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு பின்னர் எம்பிலிப்பிட்டிய சிறைச்சாலை மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இமதுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த கைதி கடந்த 13 ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top