(UTV | கொழும்பு) – வழங்குமாறு பொது திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கையில்;
வெளிநாட்டு தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு அனுப்பும் டாலர்களுக்கு குறைந்தபட்சம் 240 ரூபாய் செலுத்துமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
மேலும், எனது அமைச்சகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாடு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 15,000 அமெரிக்க டாலர் காப்பீடு வழங்குவதை கட்டாயமாக்கும் பணியும் நடந்து வருகிறது.