இலங்கை அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

(UTV |  சிட்னி) – இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு 150 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, பென் மெக்டெர்மொட் 53 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 38 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், இலங்கை அணி 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )