விமல் – உதய பதவி நீக்கம் செய்தால் தானாகவே வாசு இராஜினாமா செய்வார் என நினைத்தோம்

விமல் – உதய பதவி நீக்கம் செய்தால் தானாகவே வாசு இராஜினாமா செய்வார் என நினைத்தோம்

(UTV | கொழும்பு) – அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை பதவியில் இருந்து நீக்கினால் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை பதவியில் இருந்து தானாகவே இராஜினாமா செய்வார் என நினைத்தோம் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (8) அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்ததும் விருப்பமில்லாமல் தான் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சுமுகமாக பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“அரசியல் மற்றும் ஆட்சியில் சில முடிவுகளை எடுக்க வேண்டும். அந்த அமைச்சர்களுடன் இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை ஏன் நீக்கவில்லை என்று கேட்கின்றேன். மூன்றாவது தானாகவே போய்விடும் என்று நினைத்தோம். அவர்களை இல்லை என்று ஆட்சியினை தொடரமுடியாது என்று இல்லையே.

ஆனால் எங்களை திட்டுபவர்கள், விமர்சிப்பவர்கள் எதிரிகள் அல்ல. பொறுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றும், பிரதமரிடம் இருந்து அரசியல் சகிப்புத்தன்மை குறித்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்..” என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )