உலகம்

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணம்

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நோயாளி இரண்டு மாதம் ஆன நிலையில் நேற்று உயிரிழந்தார்.

அமெரிக்காவின் மேரிலாண்டில் வசிப்பவர் டேவிட் பென்னட் (57). இதய நோயாளியான இவரது உயிரை காப்பாற்ற மாற்று இதயம் பொருத்த வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால், பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகளால் மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவராக பென்னட் இருந்தார்.

இதனால், இவரின் உயிரை காப்பாற்ற, பன்றியின் இதயத்தை பொருத்த மேரிலாண்ட் மருத்துவ பல்கலைக்கழக வைத்தியர்கள் முடிவு செய்தனர். இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அனுமதி வழங்கியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top