உலகம்

இம்ரான் கான் ஆட்சி தப்புமா?

(UTV |  இஸ்லாமாபாத்) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை (Imran Khan) பதவியிலிருந்து நீக்குவதற்கான நம்பிக்கையில்லா பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை உரிய வகையில் முகாமைத்துவம் செய்யாமை தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்தே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை மறுதினம்(31) வியாழக்கிழமை பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அதன்பின்னர் 07 நாட்களுக்குள் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை National Assembly எனப்படும் அந்நாட்டு பாராளுமன்ற கீழ்ச்சபையின் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று(28) முன்மொழிந்திருந்தார்.

பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்தை அகற்றுவதற்கு, மொத்தமுள்ள 342 உறுப்பினர்களில் 172 பேரின் ஆதரவு தேவையென எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top