பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பங்குச்சந்தை பூட்டு

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பங்குச்சந்தை பூட்டு

(UTV | கொழும்பு) – இலங்கை தற்காலிகமாக திவாலாகியுள்ளதாக அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகியிருந்தததைத் தொடர்ந்து கொழும்பு பங்குப்பரிவர்த்தனையிலிருந்து பல முதலீட்டாளர்கள் தமது பங்குகளை விற்பனை செய்து வெளியேறி வரும் நிலையில், பங்குப்பரிவர்த்தனை பாரிய சரிவுகளை எதிர்கொள்வதை தவிர்க்கும் வகையில் ஐந்து தினங்களுக்கு மூடிவிடுவதற்கு இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு தீர்மானித்தது.

இதன் பிரகாரம் ஏப்ரல் 18 முதல் 22 வரையான ஒரு வார காலம் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறாது. இந்த அறிவித்தலுக்கு பல தரப்பினரிடமிருந்து பல்வேறு வகையான கருத்துகள் வெளிப்பட்டிருந்தன.

இலங்கையின் அந்நியச் செலாவணி கடன்களை மீளச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பான தீர்மானம் கடந்த வாரம் வெளியாகியிருந்ததைத் தொடர்ந்து, பங்குப்பரிவர்த்தனையும் இவ்வாறு மூடப்பட்டுள்ளமை சர்வதேச சமூகத்துக்கு எதிர்மறையான சமிக்ஞையை வழங்குவதாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார உறுதிப்பாடின்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மாதம் ஆரம்பம் முதல் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் அடிக்கடி இடைநிறுத்தப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )