(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
அதன்படி, இலங்கையின் 26வது பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.
ரணில் விக்ரமசிங்கே இதற்கு முன்னர் இலங்கையின் பிரதமராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார்.
