விளையாட்டு

குஜராத் அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 50வது போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் குஜராத் லயன்ஸ் மற்றும் டெல்லி டெயார் டெவில்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியில் முதலில் துடுப்பாடிய குஜராத் லயன்ஸ், 20 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதனை அடுத்து பதிலளித்து துடுப்பாடிய டெல்லி டெயார் டெவில்ஸ், 19.4 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இதேவேளை புள்ளி பட்டியலின் அடிப்படையில், மும்பை இந்தியன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ரைசிங் பூனே சுப்பர் ஜெயன்ஸ் அணியும் 16 புள்ளிகளுடன் ஓட்ட சராசரி விகிதத்தின் அடிப்படையில் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 15 புள்ளிகளையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 புள்ளிகளையும், டெல்லி டெயார் டெவில்ஸ் 10 புள்ளிகளையும் பெற்று நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் இடங்களில் உள்ளன.

குஜராத் லயன்ஸ் 8 புள்ளிகளுடனும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் 5 புள்ளிகளுடனும் இறுதி இரண்டு இடங்களில் இருக்கின்றன.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/161059-2.jpg”]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top