உள்நாடு

ஹரின், மனுஷவுக்கு SJB இனால் ஒழுக்காற்று நடவடிக்கை

(UTV | கொழும்பு) –   ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கும் என இன்றைய (20) பாராளுமன்ற உரையில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு வழங்கி இணைந்தமை தொடர்பிலேயே கட்சி இந்த தீர்மானத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இன்றைய அமைச்சர்கள் பதவியேற்பில் ஹரின் பெர்னாண்டோவுக்கு சுற்றுலா அமைச்சும் மனுஷ நாணயக்காரவுக்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top