உள்நாடு

“கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பொய்யான வருவாயைக் காட்டி நாடாளுமன்றம் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது”

(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்று (மே 24) பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றி, தற்போதைய இக்கட்டான பொருளாதார நிலைமையின் உண்மை யதார்த்தத்தை மறைக்க வேண்டாம் எனவும் குறுகிய கால நிலையிலும் கட்சி பேதமின்றி நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான கொள்கைத் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட போது எதிர்ப்பின் காரணமாக அமுல்படுத்த முடியாத நிலையில் இன்று அதனை அறிமுகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் கொள்கை தீர்மானங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு நிதிக்குழுவின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா பரிந்துரைத்துள்ளார்.

இதன்படி, இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தேவையான ஆதரவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதிக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நிலை குறித்து விளக்கமளித்த மத்திய வங்கியின் ஆளுநர், உலக வங்கியின் உதவியாக 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு இணங்கப்பட்டுள்ளது.

டொலர்கள் வழங்கப்படுகின்ற போதிலும் மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லிட்ரோ எரிவாயு போன்ற நிறுவனங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் டொலர்களை கொள்வனவு செய்வதற்கான ரூபா பணம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைக்காலமாக வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் மதிப்பிடப்பட்ட அரச வருமானம் உண்மையான நிலைமைக்கு அப்பாற்பட்ட உண்மைக்கு மாறான வருமானமாக முன்வைக்கப்பட்டதன் மூலம் பாராளுமன்றத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக இந்த மதிப்பிடப்பட்ட அரச வருமானத்தின் அடிப்படையில் அமைச்சுக்கள் உள்ளிட்ட செலவினங்களுக்காக பெருமளவிலான பணம் ஒதுக்கப்பட்டு இறுதியில் செலவீனத்தை ஈடுகட்ட முடியாத பாரிய வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இந்நிலைமை கடன் பொறிக்கு வழிவகுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வருமான வரியை முறையாக வசூலிக்கும் பொறிமுறையை ஏற்படுத்துதல், ரத்தினக்கல் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் முறைகேடுகளைத் தடுப்பது, உரிய வருமானத்தை வழங்குவது உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. நாடு.

உள்ளுர் திறைசேரி சட்டமூலங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் முன்னர் அனுமதிக்கப்பட்டதை விட ஒரு இலட்சம் கோடி ரூபாவாக கடன் பெறுவதற்கான வரம்பை அதிகரிப்பதற்கான பிரேரணையை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நிதிக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

 

  • தமிழாக்கம் – ஆர்.ரிஷ்மா 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top