பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் முக பக்கவாத நோயால் பாதிப்பு

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் முக பக்கவாத நோயால் பாதிப்பு

(UTV |  டொரன்டோ) – கனடா நாட்டின் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் முக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

கனடாவின் பிரபல பாடகராக இருப்பவர் ஜஸ்டின் பீபர். 28 வயதாகும் பீபர் ஆரம்பரத்தில் யூட்யூப்பில் பாப் பாடல்களை பாடி வெளியிட்டு, உலகம் முழுவதும் பிரபலமானார். இவரது பாப் பாடல்கள் மட்டுமல்ல சர்ச்சைகளும் மிக பிரபலம்.

மிக இளம் வயதிலேயே புகழின் உச்சியை தொட்ட பீபர், அடிக்கடி குடித்த விட்டு வேகமாக காரை ஓட்டி போலீசில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டவர். ஒருமுறை வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்களை நோக்கி வீட்டின் பால்கனியில் இருந்து எச்சில் துப்பி பெரிய சர்ச்ரையில் சிக்கி. பக்கத்து வீட்டின் மீது முட்டைகளை வீசுவது, பல பெண்களுடன் டேட்டிங் செல்வது என பல சர்ச்சைகளில் சிக்கி வந்துள்ளார்.

உலகில் டாப் பாடகர்கள் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ள பீபர், தற்போது தான் மிகவும் அரிதான முக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்த நோயின் பாதிப்பு காரணமாக முகத்தின் ஒரு பகுதி செயலிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

மிக விரைவில் உலகம் முழுவதும் சென்று இசைக் கச்சேரிகள் நடத்த பீபர் திட்டமிட்டிருந்தார். தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக இசைக் கச்சேரிகளை அவர் ஒத்திவைத்துள்ளார். ராம்சே ஹன்ட் என்ற அரிய வகை நோயால் பீபர் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வகை நோய் முகத்தில் உள்ள உறுப்புக்களை செயலிழக்க வைத்து விடும். முகத்தில் உள்ள நரம்புகளை தாக்கக் கூடிய நோய் என்பதால், பீபருக்கு முக பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.

பீபருக்கு முகத்தின் வலது புறம் செயலிழந்து உள்ளது. தனக்கு ஏற்பட்டுள்ள நோயின் பாதிப்பை அவரே வீடியோவாக வெளியிட்டு விளக்கி உள்ளார். அதில் அவர், அடுத்தடுத்து நான் எனது இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்து வருவது எனது ரசிகர்களை விரக்தி அடைய வைத்துள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உடல் ரீதியான பிரச்சனைகள் காரணமாகவே கச்சேரிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கு தற்போது மிகவும் சோர்வாக உள்ளது. நீங்கள் எனது உடல்நிலையை புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். எனது முகத்தின் வலது பக்கத்தை என்னால் கன்ட்ரோல் செய்ய முடியவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by Justin Bieber (@justinbieber)

COMMENTS

Wordpress (0)
Disqus ( )