பொருளாதாரத்தில் நசுங்கும் இலங்கை

பொருளாதாரத்தில் நசுங்கும் இலங்கை

(UTV | கொழும்பு) – இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு உள்ளிட்டவை கூட மக்கள் வாங்க முடியாத விலைக்கு விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில் அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான செயல்திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை கூடியது. அதில், ரூ.12 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு 2.5 சதவீதம் சமூக பங்களிப்பு வரி விதிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து, அதன் மூலம் எரிசக்தி பற்றக்குறையை சமாளிக்கும் விதமாக, அரசு ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )