உள்நாடு

குண்டுவெடிப்பு தொடர்பான புலனாய்வுக் கடிதம் தொடர்பில் அநுர அம்பலம்

(UTV | கொழும்பு) – ஜூலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் இருந்து வடக்கு, கிழக்கு அல்லது தெற்கில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்து, பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ் மா அதிபர் அனுப்பிய கடிதத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (04) ஊடகங்களுக்கு சமர்ப்பித்தார்.

அந்த இரண்டு நாட்களில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினரால் வெடிகுண்டுத் தாக்குதல் அல்லது ஏதேனும் நாசவேலை மேற்கொள்ளப்பட்டது என்பதை விடுதலைப் புலிகளுக்கு உணர்த்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீதும் தாக்குதல் நடத்தி அவர்கள் மீதும் அவர்களது வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தி அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க ஜேவிபி மற்றும் முன்னணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இதனை நிராகரிப்பதாகவும், எதிர்வரும் சில தினங்களில் நடத்தப்படவுள்ள பொது மக்கள் போராட்டத்தை பயமுறுத்துவதற்காக அரசாங்கம் இந்த கடிதத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top