கிசு கிசு

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான தேநீர் கட்டணத்தை ஜனாதிபதி செலுத்தினார்

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேநீர் வைபவத்திற்கான முழு செலவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பணத்தில் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அன்றைய தினம் தேநீர் விருந்துக்கு செலவிடப்பட்ட 272,000 ரூபா ஜனாதிபதியின் தனிப்பட்ட பணத்தில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இக்கட்டான காலப்பகுதியில் அரசாங்கச் செலவுகள் குறைந்தபட்சமாக இருக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் அஷு மாரசிங்க தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top