கேளிக்கை

‘யசோதா’ வுக்கு ஆதரவாக சூர்யா

(UTV |  சென்னை) – இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’.

BAN INDIA திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

யசோதா திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘யசோதா’ படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து ‘யசோதா’ படத்தின் டிரைலர் நேற்று (27) மாலை 5.36 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாடகைத் தாய்க்கு ஏற்படும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top