முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு

(UTV | லாஹூர்) – பாகிஸ்தான் பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-எ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) தலைவருமான இம்ரான் கான், வாஸிராபாத் நகரின் ஸாபர் அலி கான் சவுக் பகுதியில் பேரணியில் ஈடுபட்டிருந்த போது, அவர் இருந்த கண்டெய்னர் லாரி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில், இம்ரான் கானின் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பலரும் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )