உடல் நலம் குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா

(UTV | சென்னை) –  இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘யசோதா’ படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலானது. இதனிடையே நடிகை சமந்தா சிகிச்சை எடுத்துக் கொண்டு டப்பிங் பேசிய புகைப்படங்கள் வைரலானது.

இந்நிலையில், நடிகை சமந்தா யசோதா படத்தின் ரிலீஸை முன்னிட்டு பல்வேறு புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்கான பிரத்யேக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் தொடர்பான நேர்காணில் பேசிய சமந்தா தனது உடல்நலம் குறித்து பேசியுள்ளார்.

அதில், “இந்த காலகட்டத்தில் என்னுடைய சில நாட்கள் நல்லதாக இருக்கும், சில நாட்கள் கெட்டதாக இருந்தன. ஆனால் இவ்வளவு தூரம் நான் கடந்து வந்துவிட்டேன் என்பதை பார்க்கும் போது ஆச்சர்யமாக உள்ளது. ஆனால் உயிருக்கு ஆபாத்தான நிலையில் என்னுடைய உடல்நிலை இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை. நான் இன்னும் சாகவில்லை. அதுபோன்ற செய்திகள் தேவையற்றது” என்று கண்கலங்கி பேசினார்.

யசோதா திரைப்படம் நவம்பர் 11-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *